6 மாநில இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி,

தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநில பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப். 23-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்காளத்தில் இருகட்டங்களாக ஏப். 23, 29-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கேரளம், அசாம், புதுச்சேரியில் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தநிலையில் மராட்டியம், குஜராத், கர்நாடகம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மராட்டியம், குஜராத்தில் ஏப். 23-இல் வாக்குப்பதிவும் கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் ஏப். 9-இல் வாக்குப்பதிவும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் – போன்டா

குஜராத்தில் – அம்ரேத்

கர்நாடகத்தில் – பாகல்கோட், தாவநாகரி தெற்கு

மராட்டியம் – ராஹுரி, பாராமதி

நாகாலாந்தில் – கோரிடாங்க்

திரிபுராவில் – தர்மாநகர்

மே 4-இல் வாக்கு எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

Source link