7 விக்கெட்டுகள்… 44 ஆண்டு கால சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை

டுனெடின்

நியூசிலாந்து நாட்டின் டுனெடின் நகரில் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதற்காக ஜிம்பாப்வே அணி அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டியை நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இன்று 2-வது போட்டி நடந்தது.

இதில், நியூசிலாந்து கேப்டன் அமெலியா கெர் அதிரடியாக பேட்டிங், பவுலிங்கில் சாதித்து அணியை வெற்றி பெற செய்ததுடன், சாதனை படைத்துள்ளார். முதலில் மோல்லி பென்போல்டை, கெர் பந்து வீச செய்துள்ளார். இதன்படி, பென்போல்ட் 17 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Also Read
ராஜஸ்தான்: மனைவியுடன் தகராறு; ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை வெட்டி கையோடு எடுத்து சென்ற மருமகன்

7 விக்கெட்டுகள்... 44 ஆண்டு கால சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை

இதனால், ஜிம்பாப்வே அணி 48/3 என திணறியது. இதனை பயன்படுத்தி கொண்ட கெர், அவரே பந்து வீச தொடங்கினார். துருரு, முபாசிக்வா, சதோன்ஜ்வா, ஜிமுனு, நியாஷா, ஆத்ரி, மகுஷா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி, ஜிம்பாப்வே அணியை 102 ரன்களில் சுருட்டினார்.

அடுத்து, பேட்டிங்கிலும் கெர் 45 ரன்களை எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்துள்ளார். இதனால், 2-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து அணி போட்டி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

1982-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியின்போது, முன்னாள் நியூசிலாந்து வீராங்கனை ஜாக்கி லார்டு 6/10 எடுத்தது சாதனையாக இருந்தது. 44 ஆண்டுகளுக்கு பின்பு, 7 விக்கெட்டுகள் எடுத்து இந்த சாதனையை மற்றொரு நியூசிலாந்து வீராங்கனையான கெர் முறியடித்து உள்ளார்.

Source link