98-வது ஆஸ்கார் விருதுகள் கோலாகலம்: அதிக விருதுகளை தட்டி சென்ற அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் 

98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி, இன்று (மார்ச் 16) அதிகாலை 4.30 மணிக்கு கோலாகலாமாக தொடங்கியது. இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியை இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வெள்ளை நிற உடையில் நடிகை பிரியங்கா சோப்ரா வந்தது அனைவரையும் கவர்ந்தது. ஆஸ்கார் விருதை பிரியங்கா தேர்வு தொகுத்து வழங்குவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டும் அவர் இந்த கௌரவத்தைப் பெற்றிருந்தார்.

‘One Battle After Another 6 விருதுகள் FRANKENSTEIN திரைப்படம் 3 விருது

சிறந்த படம், இயக்குநர், துணை நடிகர், படத்தொகுப்பு, சிறந்த நடிகர் தேர்வு, திரைப்படம் வென்று சாதனை படைத்தது. ‘One Battle After Another திரைப்படம் 6 விருதுகளை தட்டி சென்றுள்ளது. FRANKENSTEIN திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது. தயாரிப்பு வடிவமைப்பு, ஒப்பனை – சிகை அலங்காரம் மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் FRANKENSTEIN திரைப்படம் ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றது.

திரைப்பட வரலாற்றில் சில படங்கள் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கின்றன. அந்த வரிசையில் முக்கியமான இடத்தை Frankenstein திரைப்படம் பிடித்துள்ளது. விஞ்ஞானத்தின் எல்லைகளை மீறி மனிதன் உயிரற்ற உடல் பகுதிகளை ஒன்றிணைத்து உயிரை உருவாக்க முயற்சிக்கும் ஆபத்தான ஆசையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் என்பது குறிப்பிடதக்கது.

  ‘சின்னர்ஸ்’-‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படங்களுக்கு அதிக விருது 

 ‘சின்னர்ஸ்’ (Sinners) மற்றும் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ (One Battle After Another) ஆகிய திரைப்படங்கள் பல முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளன. ‘சின்னர்ஸ்’ படத்தின் இசைக்காக லுட்விக் கோர்டான்சன் மீண்டும் ஒரு ஆஸ்கர் விருதை வென்று தனது சாதனையைத் தொடர்கிறார். இதேபோல் ஹாலிவுட் நடிகர் சீன் பென் மூன்றாவது முறையாக ஆஸ்கர் விருது வென்றார். “One Battle After Another” என்ற திரைப்படத்தில், ராணுவ வீரராக நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் துரால்ட் அர்காபா. ‘சின்னர்ஸ்’ திரைப்படத்தில் படத்தின் ஒளிப்பதிவிற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

விருதுகளை பெற்ற படங்கள் விபரம் பின்வருமாறு:

* வெப்பன்ஸ் படத்தில் நடித்த ஏமி மேடிகனுக்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது.

* தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்- சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது.

* ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் சிறந்த VISUAL EFFECTS’க்கான ஆஸ்கர் விருதை வென்றது.

* சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது: ஒன் பேட்டில் ஆப் அன்டர்ன்

* நார்வே நாட்டின் “செண்டிமென்டல் வால்யூ” திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

* பெஸ்ட் ஓரிஜினல் ஸ்கிரின்பிளேக்கான ஆஸ்கர் விருதை சின்னர்ஸ் திரைப்படம் தட்டி சென்றது. இயக்குநர் ரயான் கூக்ளர் விருதை பெற்றுக் கொண்டார்.

சிறந்த நடிகை: “ஹேம்னெட்” படத்திற்காக ஜெஸ்ஸி பக்லிக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது

சிறந்த நடிகர்: சின்னர்ஸ் படத்திற்காக சிறந்த முன்னணி நடிகருக்கான ஆஸ்கர் விருதை மைக்கேல் பி. ஜோர்டான் வென்றார்.

Source link