'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' – புதிய இசை நிறுவனம் தொடங்கிய அனிருத்

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வரும் அனிருத் இசையில் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

இதற்கிடையில் இசைப்பயணத்தை இன்னும் விரிவுபடுத்தும் விதமாக ‘அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்’ என்ற இசை நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார். சினிமா பாடல்கள் மற்றும் பாப் பாடல்களை பெரிய அளவில் பிரபலப்படுத்த இந்த இசை நிறுவனத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்குச் சுயாதீன இசையில் அதிக ஆர்வம் இருந்தது. புதிய இசை நிறுவனம் எனது திரைப்பட மற்றும் திரைப்படம் அல்லாத படைப்புகளுக்கு ஒரு வீடாக அமையும். திறமையான புதிய கலைஞர்களை உலகிற்கு அடையாளம் காட்டுவதே எங்களது நோக்கம், என்று தெரிவித்துள்ளார். ‘பிரேக்கிங் பேட்’ என்ற பிரபல அமெரிக்க தொடரில் ஈர்க்கப்பட்ட அனிருத் தனது ஸ்டுடியோவிற்கும், தற்போது தனது ஆடியோ லேபிளுக்கும் அந்த பெயரையே சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link