கொழும்பு,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் இன்று நடைபெற்று வரும் 35வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நமீபியா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டுடப்பட்டது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் பர்ஹான் 58 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நமீபியா களமிறங்கி விளையாடி வருகிறது.
