அமராவதி,
வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் விசாகப்பட்டினம் கடற்கரையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில், சர்வதேச கடற்படை மதிப்பாய்வு(IFR) நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, “கடலில் எழும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்கு எதிராக தடுப்பு மற்றும் பாதுகாப்பிற்கான நம்பகமான கருவியாக பணியாற்ற இந்திய கடற்படை இந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும், பரந்த கடல்சார் வர்த்தகத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், உலகெங்கிலும் உள்ள கடற்படைகளுடன் நல்லெண்ணத்தை ஊக்குவிப்பதிலும், நம்பிக்கை மற்றும் நட்புறவை உருவாக்குவதிலும் இந்திய கடற்படை முக்கிய பங்காற்றுகிறது” என்று தெரிவித்தார்.
