மாற்றுத்திறனாளிகள் போராட்டம் மீதான காவல்துறையின் அணுகுமுறை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

ஆந்திரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகை தமிழ்நாட்டிலும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு பிப்ரவரி 10 முதல் நடத்தி வரும் தொடர் போராட்டத்தில் 17.02.2026 ஆம் தேதி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் அமைப்பு காவல் துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி சிவானந்த சாலையில் திரண்டுள்ளனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அடிப்படை வசதிகள் இல்லாத ராஜரத்தினம் மைதானத்தில் காவலில் வைத்ததும், அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை செய்வதை ஏற்க மறுத்த போது, மீண்டும் பேருந்துகளில் ஏற்றி, நாள் முழுவதும் அலைக்கழித்து, உணவு, தண்ணீர் இல்லாமல் நள்ளிரவுக்கு மேல் 18.02.2026 ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இறக்கி விட்டு, பலவந்தமாக ஊருக்கு திருப்பி அனுப்ப முயற்சித்த முறையும் எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாதது. காவல் துறையின் அத்துமீறலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி மயக்கடைந்து, மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதால் காப்பற்றப்பட்டார் என்பதும் அரசின் ஜனநாயக நடைமுறைக்கு தீரா களங்கத்தை ஏற்படுத்தியுள்ள அராஜகமாகும்.

அடிப்படை உரிமைகளுக்காக, சட்ட ரீதியான கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டங்களை காவல் துறையினர் அணுகும் முறையில் அதிகார அத்துமீறல்கள் நடைமுறையாக இருப்பதையும், மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் நடத்திய அராஜகத்தையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link