ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

ஒடிசாவிலிருந்து தென்காசிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மாவட்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

குத்துக்கல்வலசையிலிருந்து கணக்கப்பிள்ளைவலசை செல்லும் சாலையோரம் நின்ற, மதுரையிலிருந்து வந்த லாரியில் போலீசார் சோதனையிட்டனர். மேலும் அங்கிருந்த நெட்டூர் பகுதியைச் சேர்ந்த இசக்கிகுமாரிடமிருந்து 4 நபர்கள் கஞ்சா பொட்டலங்களை வாங்க முயன்றபோது போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.

இசக்கிகுமார் அம்பை பகுதியைச் சேர்ந்த நயினார் விக்னேஷ், ராஜாராம், நெட்டூர் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் அய்யனார்குளம் பகுதியைச் சேர்ந்த மனோரஞ்சித் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, லாரி, கார் மற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Source link