16 வயது சிறுமிக்கு ‘பறக்கும் முத்தம்’…9 ஆண்டுகள் கழித்து 3 ஆண்டு சிறை – கோர்ட்டு அதிரடி

மும்பை,

16 வயது சிறுமிக்கு ‘பறக்கும் முத்தம்’ கொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு 9 ஆண்டுகள் கழித்து தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Also Read
வங்கி வேலையை ராஜினாமா செய்த மராட்டிய முதல்-மந்திரியின் மனைவி
16 வயது சிறுமிக்கு ‘பறக்கும் முத்தம்’…9 ஆண்டுகள் கழித்து 3 ஆண்டு சிறை - கோர்ட்டு அதிரடி

தீர்ப்பில், ‘பறக்கும் முத்தம்’ போன்ற செயல் வெளிப்படையாக பாதிப்பில்லாதது போல தோன்றினாலும், அது பெண்ணின் கண்ணியத்தை மீறும் பாலியல் ரீதியான செயல் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சிறுமியின் மனநிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்ததால், இது தண்டனைக்குரிய குற்றம் என கூறியது.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு தற்போது திருமணமாகி ஒரு கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link