ஆஸ்திரேலியா லீக் சுற்றுடன் வெளியேறிய காரணம் இது தான்..ரிக்கி பாண்டிங்

துபாய்,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பலம் வாய்ந்த அணியான ஆஸ்திரேலியா லீக் சுற்றுடன் வெளியேறியது.

ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளி யேறியது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஆஸ்திரேலியாவுக்கு இந்த உலகக் கோப்பை பயணம் மோசமாக அமைந்திருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கம்மின்ஸ், ஹேசில் வுட் காயத்தால் விலகினர். முழு உடல்தகுதியை எட்டாததால் தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட்டும் விளையாடவில்லை. ஆனால் அவர்கள் ஜிம்பாப்வேயுடன் தோற்ற போதே, உலகக் கோப்பை வாய்ப்பு முடிந்து விட்டதாக நினைத்திருப்பார்கள். இது போன்ற உலக போட்டியை ஜெயிக்க வேண்டும் என் றால், உங்களது சிறந்த வீரர்களும், அனுபவ வீரர்களும் ஒருங்கிணைந்து முக்கியமான தரு ணங்களில் கைகொடுக்க வேண்டும். அதை செய்யவில்லை. கேமரூன் கிரீன், டிம் டேவிட் போன்ற முன்வரிசை பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்கள் எடுக்காததும் பின்னடைவுக்கு காரணமாகும்.

மேக்ஸ்வெல் 2028-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் கிளென் மேக்ஸ் வெல் இருக்கமாட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவது போல் தோன்றுகிறது. அதே சமயம் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ் நிச்சயம் அணியில் இருப்பார்கள். என தெரிவித்தார்.

Source link