"அயோத்தி படத்திற்கு பிறகு…"- சசிகுமாருக்கு இயக்குநர் ராம் பாராட்டு

சென்னை,

’மை லார்ட்’ படத்திற்கு இயக்குநர் ராம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில்,

“அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவனுக்கும், அதிகார உச்சத்தில் இருந்து விலகி விளிம்பு நிலையில் அதல பாதாளத்தில் உள்ள ஒருவருக்கும் நடைபெறும் கதை இது. சமூகத்தின் இரு முனைகளையும் தைரியமாக சொல்லும் துணிச்சலான படைப்பு” என்று குறிப்பிட்டார்.

மேலும், கதையின் ஆழத்தையும் திரைக்கதையின் வலிமையையும் பாராட்டிய அவர், “இது இயக்குநர் ராஜு முருகனின் துணிச்சலான படைப்பு” என்றார்.

Also Read
“விஜய்-அஜித் நட்பு மிகவும் அழகானது” – ஷாலினி
"அயோத்தி படத்திற்கு பிறகு..."- சசிகுமாருக்கு இயக்குநர் ராம் பாராட்டு

நடிகர் சசிகுமார் குறித்து பேசிய அவர், “அயோத்தி படத்திற்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் அவரை ஒரு உறுப்பினராக இணைத்துள்ளது” என்று பாராட்டினார்.

Source link