இன்று தியேட்டரில் வெளியான திரைப்படங்கள் பட்டியல் இதோ! (20.02.2026)

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் வித்தியாசமான கதைகளுடன் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. வெள்ளிக்கிழமை வெளியானால் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், இந்த வாரமும் பல்வேறு கதைக்களங்களில் உருவான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்த வாரம் தியேட்டர்களில் குறிப்பாக இன்று வெளியாகி உள்ள திரைப்படங்களின் பட்டியல் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் , ‘லவ் சப்ஸ்கிரைப் ஷேர்’. ஜேபி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரித்துள்ள இப்படத்தை ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கியுள்ளார். இதில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் நடித்துள்ளனர். அஷ்வமித்ரா இசை அமைத்துள்ளார்.

காதல் கதைக்களத்தில் அரவிந்த் ராஜ் எழுதி இயக்கிய திரைப்படம் மை டியர் டோலி. இந்த படத்தில் விஜே பப்பு, அனுபமா, கே பி ஒய் ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எம் பாசில் இசையமைத்துள்ளார்.

ரொமான்ஸ், திரில்லர் ஜானரில் எஸ்பி பகவதி பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிவ சம்போ. இந்த படத்தில் தில் நடராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.

‘எம்ஜி 24’ (MG 24) என்பது பிரணவ் மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமாகும். இந்த படத்தினை, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்துள்ளார். சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ‘ஸ்ட்ரைக்கர்’ படப் புகழ் ஜஸ்டின் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான படம் ‘கில்லி’. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரீ-ரிலிஸாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இன்றும் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ‘துணிவு’. மஞ்சுவாரியர் நாயகியாக நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று ரீ ரிலீஸாகி உள்ளது.

Source link