5 ஆண்டு கால சட்டசபை சுவாரஸ்யங்கள்..!

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மே மாதம் 11-ந்தேதி ஆட்சி அமைத்த திமுக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. முதல் சட்டசபை கூட்டம் மே மாதம் 11-ந்தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 8 கூட்டத் தொடர்கள் மொத்தம் 161 நாட்கள் நடைபெற்றுள்ளன. தமிழக சட்டசபையின் கடைசி கூட்டமும் இன்றுடன் முடிவடைந்தது. நிறைவு நாள் கூட்டத்தில் சபாநாயகர் மு.அப்பாவு, 5 ஆண்டு கால சட்டசபை நிகழ்வு குறித்து பேசினார். அதில் முக்கிய நிகழ்வுகளின் விவரம் வருமாறு:-

சட்டசபை கூடியது – 161 நாட்கள்

மாலையிலும் கூட்டம் கூடியது – 17 நாட்கள்

கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் – 770 மணி 23 நிமிடங்கள் (இன்று நண்பகல் 12 மணி வரை)

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் – பதிலுரை – 20 நாட்கள்

உரையாற்றிய உறுப்பினர்கள் – 109 பேர்

உரையாற்றிய நேரம் – 40 மணி 4 நிமிடங்கள்

ஆளுங்கட்சியினர் பேசியது – 47 பேர்

பேசிய நேரம் – 10 மணி 46 நிமிடங்கள்

இதர கட்சியினர் பேசியது – 62 பேர்

பேசிய நேரம் – 29 மணி 18 நிமிடங்கள்

முதல்-அமைச்சர் பேசியது – 4 மணி 11 நிமிடங்கள்

Also Read
ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி என்ஜினீயரிடம் ரூ.9.54 லட்சம் மோசடி
கோப்புப்படம்

மானியக் கோரிக்கை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்ற மொத்த நாட்கள் – 84

உரையாற்றிய உறுப்பினர்கள் – 725 பேர்

உரையாற்றிய நேரம் – 206 மணி 9 நிமிடங்கள்

முதல்-அமைச்சர் பதில் அளித்தது – 3 மணி 54 நிமிடங்கள்

பிற துறைகள் விவாதத்தில் முதல்-அமைச்சர் பதில் அளித்தது- 63 முறைகள் – 1 மணி 8 ½ நிமிடங்கள்

அமைச்சர்கள் பதிலுரை – 105 மணி 35 நிமிடங்கள்

உறுப்பினர்கள் அளித்த வினாக்கள் – 2,53,935

வினாக்கள் அளித்த உறுப்பினர்கள் – 185

அனுமதிக்கப்பெற்றவை – 65,024

Also Read
இடைக்கால வேளாண் பட்ஜெட்- உழவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலுரை
கோப்புப்படம்

அதிக வினாக்கள் கேட்ட டாப்-5 உறுப்பினர்கள்

1. ஜி.கே. மணி (பா.ம.க.) – 66,974

2. இரா.அருள் (பா.ம.க.) – 38,323

3. ப.சிவகுமார் என்கிற தாயகம் கவி (தி.மு.க.) – 33,023

4. எ.எம்.வி. பிரபாகரராஜா (தி.மு.க.) – 21,041

5. ச.அரவிந்த் ரமேஷ் (தி.மு.க.)- 15,318

அதிக அளவு வினாக்களுக்கு விடையளித்த டாப்-5 அமைச்சர்கள்

1. இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு – 76

2. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு – 73

3. பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு – 61

4. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் -59

5. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் – 47

Also Read
சென்னை மாநகராட்சியில் கொசு பாதிப்பை தடுப்பதற்கு கூடுதல் அதிகாரிகளை நியமிக்க தீர்மானம்
கோப்புப்படம்

பேரவை விதி எண் 110-ன்கீழ் வெளியான அறிவிப்புகள்

மொத்தம் அளிக்கப்பெற்றவை – 37

முதல்-அமைச்சர் அளித்தவை – 36

அனைத்து நாட்களும் பேரவைக்கு வந்த உறுப்பினர்கள்

1.வி. அமலு

2. ச. அரவிந்த் ரமேஷ்

3. வி.ஜி. இராஜேந்திரன்

4. ரா. இளங்கோ

5. ஈ.ஆர். ஈஸ்வரன்

6. தா. உதயசூரியன்

7. ஜே.ஜே. எபினேசர் என்கிற ஜான் எபினேசர்

8. இ. கருணாநிதி

9. எஸ். சுதர்சனம்

10. க. சுந்தர்

11. வி.சி. சந்திரகுமார்

12. எ.எம்.வி. பிரபாகரராஜா

13. ஜே.ஜி. பிரின்ஸ்

14. ஜி.வி. மார்க்கண்டேயன்

15. ஜெ. முகம்மது ஷா நவாஸ்

16. டாக்டர் வை. முத்துராஜா

17. பெ. ராமலிங்கம்

18. ஜோசப் சாமுவேல்

அவை நடவடிக்கையை பார்வையிட வந்தவர்கள்

மொத்தம் – 70,959

ஆண்கள் – 61,235

பெண்கள் -9,724

Source link