சென்னை,
அண்ணா பல்கலைக்கழகம் தனது அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் அடுத்த கல்வியாண்டு முதல் 2026-27 ரிலேட்டிவ் கிரேடிங் முறையிலிருந்து விலகி அப்சலூட் கிரேடிங் முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதன் பொருள் மாணவர்கள் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு பதிலாக அவர்களின் தனிப்பட்ட மதிப்பெண்களி அடிப்படையில் தரம் பிரிக்கப்படுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தின்ப் கவுன்சில் எடுத்த முடிவின்படி மாணவர்கள் அவுட்ஸ்டாண்டி முதல் மீண்டும் தேர்வு எழுதுதல் வரையிலான 8 புள்ளிட் தர முறையின் கீழ் மதிப்பிடப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் 8 புள்ளி தர முறை:
அவுட்ஸ்டாண்டிங் 10 (91-100) மிக சிறப்பு 9 (81-90) மிக நன்று 8( 71-80) நன்று 7(66-70) சராசரிக்கு மேல் 6.5(61-65), சராசரி 6 (56-60) திருப்திகரமான சாதனை 5(50-55) மீண்டும் தேர்வு எழுதல் 0 (50-க்கும் கீழ்) என்ற முறையில் தேர்வு மதிப்பெண் அளிக்கப்பட உள்ளது.
91 முதல் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு எஸ் கிரேடு வழங்கப்படும். இது அவர்களின் தனித்துவமான மற்றூம் ஆக்கப்பூர்வமான சிந்தனையை குறிக்கிறது. 2025 விதிமுறைகளின் கீழ் சேரும் தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கும் இந்த முறை பொருந்தும், தன்னாட்சி கல்லூரிகளும் இதை பின்பற்றுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள முறையில், அதிக மதிப்பெண் எடுத்தாலும் மற்றம் மாணவர்களுடனான ஒப்பீட்டினால் சிலருக்கு உரிய கிரேடு கிடைப்பதில்லை. புதிய முறையில், ஒரு மாணவர் எடுக்கும் மதிப்பெண்ணிற்கு ஏற்ற தரம் நேரடியாக வழங்கப்படும்.
ஒரே தேர்வை எழுதும் மாணவர்களின் செயல்திறனில் பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன. இந்தப் உதிய அப்சலூட் கிரேடிங் முறை மாணவர்களின் உண்மையான திறனை துல்லியமாக பிரதிபலிக்கும் என்று பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
