கதாநாயகனாக அறிமுகமாகும் பிரபல இசையமைப்பாளர் மகன்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் வித்யாசாகர். இவரை அனைவரும் அன்போடு மெலடி கிங் என அழைத்து வாழ்த்துகின்றனர். 1989ல் வெளியான ‘பூ மனம்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 225க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழில் ஜெய் ஹிந்த், தில், பூவெல்லாம் உன் வாசம், தவசி, ரன், வில்லன், தூள், இயற்கை, சந்திரமுகி, கில்லி, மொழி, குருவி போன்ற படங்களுக்கு இசையமைத்து பெரும் வெற்றியை பெற்றவர். மலையாள திரையுலகிலும் அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அவருடைய இசையில் வெளியான நிறம், தேவதூதன், தோஸ்த், மீச மாதவன், முல்லா போன்ற மலையாள படங்கள் மிகப்பெரிய ஹிட்டுகளாகின.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் பாடகரும், இசைக்கலைஞரும் கூட. ஏற்கனவே இரு சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது ‘மாயம் நீயடி’ என்ற இசை -வீடியோ ஆல்பத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். பாட லுக்கு இசையமைத்ததுடன், அதில் பாடி, ஆடி நடித்திருக்கிறார். விவேக்கின் வரிகளில் சுப்லாக்ஷினி உடன் இணைந்து அவர் பாடியுள்ளார். இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இசைக்கலைஞரான ஹர்ஷவர் தன் தற்போது வெள்ளித்திரைக்கு தாவுகிறார். புதிதாக உருவாகவுள்ள படத்தில் அவர் கதாநா யகனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவும் இருக்கிறது.

இதுகுறித்து ஹர்ஷவர்தன் கூறும்போது, “என்னை பொறுத்தவரை கலைக்காக எதையும் செய்ய தயாராகவே இருக்கிறேன். எந்த ரூபத்திலும் அதை செய்வேன். ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். இசையில் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்த வேண்டும். சினிமா எனக்கு பிடித்த ஒன்று. அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன்”, என்கிறார்.

Source link