பாங்காக்,
8 அணிகள் கலந்து கொண்ட வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (ரைசிங் ஸ்டார்) பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தாய் லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணி, இலங்கை ‘ஏ’ அணியை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி, 19.4 ஓவர் களில் 118 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 13.3 ஓவர்களில் 5 விக் கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
