மும்பை,
உலகப்புகழ் பெற்ற பாப் நட்சத்திரமான ஷகிரா, சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா வருகிறார்.
கொலம்பியாவைச் சேர்ந்த ஷகிரா, 2010 கால்பந்து உலகக் கோப்பைக்காக பாடிய ’வாகா வாகா’ (This Time for Africa) பாடல் மூலம் உலகளவில் பெரும் புகழ் பெற்றார். அந்தப் பாடல் யூடியூபில் 445 கோடிக்கு மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் மும்பை மற்றும் டெல்லியில் அவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. ’பீடிங் இந்தியா’ அமைப்பு மற்றும் ’டிஸ்ட்ரிக்ட் பை சோமேட்டோ’ இணைந்து இந்த இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
அதன்படி, ஏப்ரல் 10 – மும்பை, மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் மற்றும் ஏப்ரல் 15 – டெல்லி, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
கடைசியாக 2007ஆம் ஆண்டு தனது ’ஓரல் பிக்ஸேஷன்’ உலக சுற்றுப்பயணத்தின்போது மும்பை வந்திருந்த ஷகிரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய ரசிகர்களை மீண்டும் சந்திக்கவுள்ளார்.
