நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

சென்னை,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி மார்ச் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேஷவ் மஹராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா:

கேஷவ் மகாராஜ், பார்ட்மென், ஈதன் போஷ், ஜெரால்ட் கோட்ஸி,டோனி டி ஜோர்ஜி,கானர் எஸ்டெர்ஹுய்சன், டயான் பாரெஸ்டர், ஜோர்டான் ஹெர்மன், ரூபின் ஹெர்மன், ஜார்ஜ் லிண்டே, மொகீனா , ப்ரீனெலன் சுப்ராயன், ஆண்டிலே சிமிலேன்
லூத்தோ சிபம்லா, ஜேசன் ஸ்மித்.

Source link