விக்ரமின் சைலண்ட் சம்பவம்…லைன்அப்-ல் 4 படங்கள்!

சென்னை,

தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் கடைசியாக வீர தீர சூரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் விக்ரம் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில்,

சில நேரங்களில் மௌனம் என்பது தயார்படுத்திக்கொள்வது. என்னை ஈர்க்கும் கதைகளுக்காக காத்திருந்தேன். தற்போது நான் பெரிதும் மதிக்கும் நான்கு இயக்குனர்களுடன் புதிய படங்களை துவங்குவதால் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கதைகள் ஒன்றொன்றும் வித்தியாசமானவை” என தெரிவித்திருக்கிறார்.

விக்ரமின் அடுத்த படத்தை போடி ராஜ்குமார் இயக்கவிருக்கிறார். சாந்தி டாக்கீஸ் சார்பாக அருன் விஸ்வா இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். தொடர்ந்து விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்தபடியாக இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் விக்ரம். இதனைத் தொடர்ந்து மஹான் படத்தைத் தொடர்ந்து மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link