நடிகர் நிவின் பாலிக்கு சூர்யா-ஜோதிகா தம்பதியினர் வாழ்த்து

அகில் சத்யன் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த “சர்வம்” மாயா படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், ரகுநாத் பலேரி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது. தியேட்டர்களில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் நடித்த நடிகர் நிவின் பாலிக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில், சர்வம் மாயா படத்தையும், நடிகர் நிவின் பாலியை பாராட்டியும் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் பரிசுயுடன், வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து, நிவின் பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

Source link