திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட சீவலப்பேரியை சேர்ந்த முத்து (வயது 47) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
மேற்சொன்ன நபர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 4½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் முத்துவிற்கு, சேரன்மகாதேவி குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து முத்துவை, வீரவநல்லூர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
