சூப்பர் 8 சுற்று: இலங்கை – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

கொழும்பு,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 20 அணி கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் ‘சூப்பர்’ சுற்றுக்கு முன்னேறின. ‘சூப்பர்’ சுற்றுக்கு வந்துள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டி தொடரில் தற்போது ‘சூப்பர்8’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 ஆட்டங்கள் அரங்கேறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பல்லகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டே டியத்தில் தொடங்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி லீக்கில் அயர்லாந்து, ஓமன், ஆஸ்திரேலியா அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது. கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது. 6 புள்ளிகளுடன் அந்த அணி தனது பிரிவில் (பி) 2-வது இடத்தை பெற்றது.

2 முறை சாம்பியனான இங்கிலாந்து லீக் சுற்றில் நேபாளம், ஸ்காட் லாந்து, இத்தாலி அணிகளை வென்றது. முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீசிடம் பணிந்தது. 6 புள்ளிகள் பெற்ற அந்த அணி தனது பிரிவில் (சி) 2-வது இடத்தை பிடித்தது.

பல்லகெலேவில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மழைபெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

Source link