தவான் திருமணத்தில் கலந்துகொண்ட இந்திய வீரர்கள்

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோபி ஷைனை திருமணம் செய்துள்ளார்.இந்தத் திருமணம் டெல்லி-என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு நிகழ்வாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் கலந்துகொண்டு ஷிகர் தவான் – சோபி ஷைன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மா , அஷுதோஷ் சர்மா , முன்னாள் வீரர் ரெய்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source link