மதுரை, சிவகங்கையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சுற்றுப்பயணம்

சென்னை,

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சிறப்பு விமானம் மூலம் காலையில் மதுரை விமான நிலையத்துக்கு வரும் சி.பி. ராதாகிருஷ்ணன், அங்கிருந்து கார் மூலம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். இதையடுத்து, பிற்பகல் 1 மணிக்கு சிவகங்கை ராணி வேலு நாச்சியார் அரண்மனைக்கு செல்கிறார்.

பிறகு, மதுரை வண்டியூர் அம்மா திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று, 140 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மாலை 5.50 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு திரும்புகிறார்.

Source link