ஒடிசா: லாரி-போலீஸ் வாகனம் மோதல்; 5 போலீசார் பலி

ஜார்சுகுடா

ஒடிசாவில் ஜார்சுகுடா நகரில் சதர் காவல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை 49-ல் இன்று அதிகாலை 4 மணியளவில் போலீஸ் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, லாரி ஒன்று அதன் மீது மோதி விட்டு சென்றது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 8 போலீசாரில் 5 பேர் பலியானார்கள். மற்ற 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Also Read
உலகிற்கு நேரு நாகினி ஆட்டம் காட்டினார்; பிரதமர் மோடி ஏ.ஐ.-யை காட்டினார் – பா.ஜ.க.

ஒடிசா:  லாரி-போலீஸ் வாகனம் மோதல்; 5 போலீசார் பலி

அவர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது. காயமடைந்த போலீசார் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link