காஷ்மீர்: கிஷ்த்வார் பகுதியில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படை மோதல்

ஜம்மு

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கிஷ்த்வார் பகுதியில் சத்ரூ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்றனர்.

அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். உடனடியாக பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், அந்த பகுதியை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்த படையினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Also Read
தமிழகத்தில் மிக பெரிய பயங்கரவாத சதி திட்டம் முறியடிப்பு; ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடைய 8 பேர் கைது
காஷ்மீர்:  கிஷ்த்வார் பகுதியில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படை மோதல்

Source link