ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

பாங்காக்,

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் தொடரில் ஆசியவில் உள்ள நாடுகளின் மகளிர் ஏ அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் இந்திய மகளிரணி, ராதா யாதவ் தலைமையில் விளையாடியது. குரூப் ஏ பிரிவில் இந்தியா ஏ அணியும் குரூப் பி பிரிவில் வங்கதேசம் ஏ அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையே இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக தேஜல் ஹசாப்னிஸ் 51 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணியினர் தங்களது விக்கெட்டை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். இறுதியில் வங்காளதேச அணியால் 19.1 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

Source link