டிரம்ப் இல்லத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபரை சுட்டுக்கொன்ற காவலர்கள்

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான ‘மார் எலாகோ’ எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் உள்ள இல்லத்திற்குள் இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் எரிபொருள் அடங்கிய கேன் ஆகியவற்றுடன் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், துப்பாக்கியுடன் நுழைந்த நபரை சுட்டுக்கொன்றதாக அமெரிக்க உளவுத்துறை செய்திதொடர்பாளர் அந்தோணி குக்லியெல்மி தெரிவித்துள்ளார். கொல்லபட்ட நபருக்கு சுமார் 20 முதல் 25 வயது வரை இருக்கலாம் எனவும், அவரைப் பற்றிய விவரங்களை உறுதி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link