டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி

அகமதாபாத்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. இதையடுத்து 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 18.5 ஓவர்களில் 111 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்களில் தோல்வியடைந்ததே அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியாக இருந்தது. அதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Source link