நெதர்லாந்தின் இளம் பிரதமராக பதவியேற்ற ராப் ஜெட்டன்; பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி

நெதர்லாந்து நாட்டின் பிரதமராக ராப் ஜெட்டன் (வயது 38) நேற்று பதவியேற்று கொண்டார். அந்நாட்டின் வரலாற்றில் மிக இளம் வயது பிரதமரான அவருக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள செய்தியில், நெதர்லாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்ற ராப் ஜெட்டனுக்கு வாழ்த்துகள். இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளும் பல்வேறு துறைகளிலும் விரிவான நல்லுறவை கொண்டுள்ளன.

Also Read
தமிழக சட்டசபை தேர்தல்: தொகுதி பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தைக்குழு; இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு

நெதர்லாந்தின் இளம் பிரதமராக பதவியேற்ற ராப் ஜெட்டன்; பிரதமர் மோடி வாழ்த்து

நம்முடைய இரு நாடுகள் மற்றும் மக்களுக்கு இடையேயான வளர்ந்து வரும் உறவுகளை இன்னும் வலுப்படுத்த உங்களுடன் நெருங்கி பணியாற்ற நான் ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

ராப் ஜெட்டனின் சென்டிரிஸ்ட் டி66 கட்சியானது, மத்திய வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயகம் மற்றும் மத்திய வலதுசாரி மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான கட்சி ஆகிய 2 கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து உள்ளது. இதனால், 3 கட்சிகளின் தலைமையுடன் ஜெட்டன் பிரதமராக நாட்டை வழிநடத்தி, ஆட்சி செய்வார்.

Source link