கள்ளக்காதலால் விபரீதம்: தொழிலதிபர் மனைவியிடம் 1 கிலோ தங்கம் – வைர நகைகள் அபகரிப்பு

சென்னை,

சென்னை வேப்பேரி பகுதியில் பிரபல தொழிலதிபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் திலிப் என்ற வாலிபர் குடியேறினார். இவர் தொழிலதிபரின் மனைவியோடு ஆரம்பத்தில் அன்பாக பழகி உள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

Also Read
குடும்ப தகராறில் பயங்கரம்: மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகள்
கோப்புப்படம்

காதல் மயக்கத்தில் தொழிலதிபரின் மனைவி, திலிப் கேட்டதையெல்லாம் வாரி வழங்கி உள்ளார். அவ்வாறு கொஞ்சம், கொஞ்சமாக ஒரு கிலோ அளவுக்கு தங்கம் மற்றும் வைர நகைகளையும், 2.5 கிலோ எடை உள்ள வெள்ளி பொருட்களையும் அபகரித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தொழிலதிபர் மனைவி திலிப்புடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

Also Read
உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை அடித்துக் கொன்ற வாலிபர்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
கோப்புப்படம்

ஆனால், திலிப் தொழிலதிபர் மனைவியை மிரட்ட ஆரம்பித்துள்ளார். தன்னுடன் தொடர்பை நீடிக்காவிட்டால், உங்கள் தொடர்பான ஆபாச படங்கள் என்னிடம் இருக்கிறது. அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று பயமுறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபரின் மனைவி வேப்பேரி போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read
மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் கோடை… கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமாம்..!
கோப்புப்படம்

Source link