அதிமுக கூட்டணியில் 8 தொகுதிகளை கேட்கும் ஜி.கே.வாசன்

சென்னை,

கடந்த (2021) சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமாகாவுக்கு பட்டுக்கோட்டை, திரு.வி.க.நகர், ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு இடத்தில் கூட தமாகா வெற்றி பெறவில்லை.

Also Read
காற்று நிரப்பும் போது வெடித்த லாரி டயர்… தூக்கி வீசப்பட்டு வாலிபர் உயிரிழப்பு
கோப்புப்படம்

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தமாகா தொடரும் நிலையில், இந்த முறை 8 தொகுதிகளை கேட்டு வருகிறதாம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அப்போது தமாகா போட்டியிட விரும்பும் 12 தொகுதிகள் பட்டியலை அவரிடம் வழங்கியுள்ளார். அதில் 8 தொகுதிகள் ஒதுக்கித்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

Also Read
இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
கோப்புப்படம்

தமாகாவுக்கு 5 தொகுதிகள்

அப்போது, ஜி.கே.வாசனுடன் சென்ற தொழிலதிபர் ஒருவர், ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட்டும் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு எடப்பாடி பழனிசாமியோ, சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளை தமாகாவுக்கு ஒதுக்குவதாகவும், ராஜ்யசபா சீட்டை அடுத்த ஆண்டு தருவதாகவும் தெரிவித்துவிட்டாராம்.

தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு ஜி.கே.வாசன் கடிதமும் எழுதியுள்ளார்.

Also Read
கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது – கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்
கோப்புப்படம்

Source link