மராட்டியம்: 2 ஆண்டுகளில் 93 ஆயிரம் பெண்கள் மாயம்

புனே

மராட்டிய சட்டசபையில், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை மாநில உள்துறை தாக்கல் செய்தது. அதில், 2025 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் முறையே 48 ஆயிரம் மற்றும் 45 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதனால், மராட்டியத்தில் 2 ஆண்டுகளில் 93 ஆயிரம் பெண்கள் வரை காணாமல் போயுள்ளனர்.

எனினும், அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளால், 2025-ம் ஆண்டில் 30 ஆயிரத்து 877 பெண்களும், 2024-ம் ஆண்டில் 36 ஆயிரத்து 581 பெண்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

Also Read
சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்; 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

மராட்டியம்:  2 ஆண்டுகளில் 93 ஆயிரம் பெண்கள் மாயம்

இந்த பெண்களில் சிறுமிகளின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 12,113 ஆகவும் மற்றும் 2024-ம் ஆண்டில் 11,313 ஆகவும் இருந்துள்ளது.

Source link