தமிழக அரசின் வழிகாட்டு விதிகளில் என்ன தவறு? தவெக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி

அரசியல் கட்சிகளுக்கான ரோடு ஷோவுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தவெக தொடர்ந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரும்பாலான அரசியல் கட்சிகள் நெறிமுறைகளை ஏற்றுள்ள நிலையில் மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது என்றும், சேலத்தில் வெயிலால் ஒருவர் இறந்தபிறகு தான் வேலூரில் மேற்கூரை அமைத்துள்ளனர் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன என தவெக தரப்பில் வாதம் வைக்கப்பட்டது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தமிழக அரசின் எஸ்ஓபி-யில் என்ன தவறு? உள்ளது என தவெகவுக்கு சரமாரி கேள்வி எழுப்பியது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Source link