சென்னை விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா பறிமுதல் – கேரள இளைஞர் கைது

சென்னை,

தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது பயணி ஒருவரிடம் இருந்து ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சூட்கேசில் மறைத்து எடுத்து வந்த 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விமானத்தில் கஞ்சா கடத்தி வந்த கேரள இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link