’சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?’ – ராதிகா பதில்

சென்னை,

நடிகையும் அரசியல்வாதியுமான ராதிகா சரத்குமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

தாய்க்கிழவி திரைப்படத்தை மதுரையில் உள்ள தியேட்டரில் படக்குழு மற்றும் ரசிகர்களுடன் கண்டுகளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். “தற்போது என் தொழிலில் முதலில் முழு கவனம் செலுத்த விரும்புகிறேன். பின்னர் அரசியல் குறித்து பார்ப்போம்,” என கூறினார்.

Also Read
சுந்தீப் கிஷனுக்கு ஜோடியாகும் ரித்திகா நாயக்?
’சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?’ - ராதிகா பதில்

கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா, அதிதீவிரமாக களப்பணியாற்றி பிரச்சாரம் செய்திருந்தார். எனினும், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதுடன் டெபாசிட்டையும் இழந்தார்.

Source link