3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 409 ரன்கள் குவிப்பு

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதல் அதிரடி காட்டியது. அந்த அணியில் அலிசா ஹீலி, பெத் மூனி இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினர்.

அலிசா ஹீலி 158 ரன்களும் , பெத் மூனி 106 ரன்களும் எடுத்தனர்.இதனால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்குஆஸ்திரேலிய அணி 409 ரன்கள் எடுத்தது.

Source link