ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் 8 பேர் பலி

பெய்த் ஷீமேஷ்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியது. இந்த வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

Also Read
மேற்காசியாவில் பதற்றம்: பிரதமர் மோடி தலைமையில் இன்றிரவு மந்திரிசபை கூட்டம்

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் 8 பேர் பலி

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து நடத்திய தொடக்க கட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று தகவல் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், பதிலுக்கு ஈரானும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், இஸ்ரேலின் பெய்த் ஷீமேஷ் நகரில் பாலிஸ்டிக் ரக ஏவுகணை கொண்டு ஈரான் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர். இதனை இஸ்ரேலின் மருத்துவமனைகள் உறுதி செய்துள்ளன.

இந்த ஏவுகணை குடியிருப்பு பகுதியை தாக்கியதில் 27 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இஸ்ரேலுடன் அபுதாபியில் உள்ள சையத் துறைமுகம், ஐக்கிய அரபு அமீரகம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

Source link