ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் பலி

துபாய்,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எந்த நாட்டில் உள்ள படைத்தளத்தில் நடந்த தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர் என்ற விவரத்தை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

Source link