சின்ன ரோல்…பெரிய ரீச் – அனுபமா பகிர்ந்த முதல் பட ரகசியம்

சென்னை,

திரைப்படங்களில் கதாபாத்திரத்தின் நீளத்தை விட அதன் தாக்கமே முக்கியம் என நடிகை அனுபமா கூறினார்.

தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபாமா. இவர் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். கடந்த 10 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழில், கொடி, சைரன், பைசன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய அனுபமா, திரை நேரத்தை விட கதாபாத்திரத்தின் தாக்கமே முக்கியம் என கூறினார்.

Also Read
தந்தை-மகன் இடையே விரிசல்?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் தகவல்
சின்ன ரோல்…பெரிய ரீச் - அனுபமா பகிர்ந்த முதல் பட ரகசியம்

அவர் பேசுகையில், ‘என் முதல் தெலுங்கு படம்’ஆ ஆ’. அதில் நான் 5 நிமிடம்தான் நடித்திருந்தேன். அனால், அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னை பொறுத்தவரை , ஒரு கதாபாத்திரம் எவ்வளவு நேரம் திரையில் வருகிறது என்பது முக்கியமல்ல. அந்த கதாபாத்திரம் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் தாக்கமே முக்கியம்’ என்றார்.

Source link