பாலியல் தொந்தரவு புகார் – ’மஞ்சுமெல் பாய்ஸ்’ பட இயக்குநர் மீது வழக்குப்பதிவு

கொச்சி,

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரம் எஸ். பொதுவால் மீது கொச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

புகாரில், 2022-ல் ஏலம்குளம் பகுதியில் உள்ள தனது குடியிருப்புக்குள் அனுமதியின்றி நுழைந்து, பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Also Read
சின்ன ரோல்…பெரிய ரீச் – அனுபமா பகிர்ந்த முதல் பட ரகசியம்
பாலியல் தொந்தரவு புகார் - ’மஞ்சுமெல் பாய்ஸ்’ பட இயக்குநர் மீது வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு செய்வதற்கு முன் புகார்தாரரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலீஸார், இது தொடர்பாக விசாரணை நடத்த இயக்குநருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து சிதம்பரம் எஸ். பொதுவால் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இவர் முன்னதாக ஜன்.ஈ.மன் (2021) மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் (2024) ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

Source link