“ஓ பட்டர்பிளை” படத்திற்கு “ஏ” தணிக்கை சான்றிதழ்

விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஓ பட்டர்பிளை’. ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. ஹனிமூன் செல்லும் தம்பதி, அங்கு வரும் மனைவியின் முன்னாள் காதலன் என மூவருக்கு இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமாக ‘ஓ பட்டர்பிளை’ உருவாகியுள்ளது. இப்படத்தின் முழு ஆல்பமும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘ஓ பட்டர்பிளை’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Source link