தமிழில் வெளியாகும் பாவனா நடித்த ஆக்சன் திரில்லர் படம்

சென்னை,

நடிகை பாவனா தனது 90வது திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தை அறிமுக இயக்குனர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதை அமைத்துள்ளார்.

இதில் பாவனா, ‘சாரா’ என்ற கதாபாத்திரத்தில் தடயவியல் நிபுணராக நடித்துள்ளார். நடிகர் ரகுமான் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். டி சீரிஸ் பிலிம் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பினு பப்​பு, விஷ்ணு அகஸ்த்​யா, அர்​ஜுன் லால், ஷெபின் பென்​சன் மற்​றும் த்ரிஷ்யா ரகு​நாத் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

இப்படம் கடந்த மாதம் 6ந் தேதி மலையாள மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ் மொழியிலும் வெளியாக உள்ளது. அதன்படி, வருகிற 6ந் தேதி தமிழ்நாடு முழுவதும் வெளியாக உள்ளது.

Source link