கொல்கத்தா,
2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில் கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் முதலாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
