மாஸ்கோ,
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறி வைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின. இதற்கு பதிலடியாக ஈரானும் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
4 நாட்களை கடந்தும் தீவிரம் குறையாமல் போர் நீடித்து வருகிறது. இதுகுறித்து ரஷியா, ‘அணு ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு வரக்கூடாது எனும் எந்த உன்னத நோக்கத்துக்காக ஈரானில் அமெரிக்கா போர் தொடுத்துள்ளதோ, இப்போது அதற்கு நேரெதிராக விளைவுகள் ஏற்படக்கூடும்.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை ரஷியாவுக்கு கிடைக்கவில்லை. அப்பிராந்தியத்தில் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரே நாடாக இஸ்ரேல் திகழ்கிறது. ஆயினும், இதனை நிராகரித்தோ ஆமோதித்தோ அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை’ என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
