தஞ்சாவூரில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த இருவர் படுகாயம்

தஞ்சாவூர்,

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில் காயமடைந்துள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர் விக்னேஷ் (20) மற்றும் அவரது நண்பர் அருண் (21) ஆகியோர், தஞ்சாவூர் அருகே சென்றபோது அவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Also Read
‘ஜனநாயகன்’ விவகாரத்தில் குரல் கொடுத்த முதல் அமைச்சருக்கு நன்றி: விஜய் பேச்சு
தஞ்சாவூரில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த இருவர் படுகாயம்

இந்த விபத்தில் விக்னேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நண்பர் அருணுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

தனது வாகனத்தை ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர வேண்டாம் என்று விஜய் பல கூட்டங்களில் கேட்டுக்கொண்ட போதிலும், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link