விஜய்யை பாராட்டியதால் சிக்கல்? – பாடகர் வேல்முருகன் மீது புகார்

சென்னை,

பாடகர் வேல்முருகன் மீது நெல்லை வழக்கறிஞர் குற்றால நாதன் புகாரளித்துள்ளார்.

தவெகவின் 3ஆவது ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் பாடகர் வேல்முருகன் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்.

அப்போது விஜய்யை முருகன் என்று வர்ணித்து வேல்முருகன் பாடியதாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த 1-ம் தேதி தைப்பூசம் நடந்த நிலையில் இன்றுதான் (நேற்று) உண்மையான தைப்பூசம் என வேல்முருகன், விஜய்யை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யை பாராட்டியதால் சிக்கல்? - பாடகர் வேல்முருகன் மீது புகார்
அரங்கம் அதிர.. விசில் பறக்கவே.. மேடையில் நடனமாடிய விஜய்!

இந்த நிலையில், தவெக தொடக்க விழாவில் முருகன் பாடலை அவமதித்ததாக பாடகர் வேல்முருகன் மீது நெல்லை வழக்கறிஞர் குற்றாலநாதன் புகார் அளித்துள்ளார்.

Source link