சென்னையில் 34 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

சென்னை,

சென்னையில் 34 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்களின் விவரம் மட்டும் கீழே தரப்பட்டுள்ளது.

ரோகிணி சாஸ்திரிநகருக்கும், ராஜேஷ் கண்ணா வண்ணாரப் பேட்டைக்கும், வேல்மணி ஆயிரம்விளக்கிற்கும், ஆனந்த் துறைமுகத்துக்கும், சீனிவாசன் பெரியமேட்டுக்கும் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரவிச்சந்திரன் வேப்பேரிக்கும், கண்ணன் ராயப்பேட்டைக்கும், ராமசாமி சேத்துப்பட்டுக்கும், கிருஷ்ணகுமார் குமரன்நகருக் கும், ராஜ்பிரபு தேனாம்பேட்டைக்கும். செந்தில் முருகன் வடக்கு கடற்கரைக்கும் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர்களாக மாற்றப்பட்டனர். மாற்றப்பட்டுள்ள இதர இன்ஸ்பெக்டர்கள் மற்ற பிரிவுகளில் பொறுப்பேற்பார்கள்.

Source link