ஈரான் போரால் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்: தென்னைநார் ஏற்றுமதி ரூ.100 கோடிக்கு பாதிப்பு

கோவை,

கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை மட்டையில் இருந்து தென்னை நார், துகள்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் 60 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகளும், தமிழகத்தில் 12 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. தென்னை நார்கள், நார் துகள்கள் சென்னை, தூத்துக்குடி, கொச்சி போன்ற துறைமுகங்களுக்கு கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்படுகிறது.

அங்கிருந்து கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறது. வெளிநாடுகளில் மதிப்பு கூட்டுப்பொருட்களாக தயாரித்து விற் பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் தற்போது ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஈரான் தனது கடல் எல்லையை மூடி உள்ளதால், கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சென்னை, கொச்சி, தூத்துக்குடி ஆகிய துறைமுகங் களில் தென்னைநார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கி கிடப்பதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தேசிய தென்னைநார் கூட்டமைப்பு தலைவர் கூறியதாவது:- இந்தியாவில் ஆண்டிற்கு 11 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நாரும். 20 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார் துகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 125 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்கா விதித்த வரி உயர்வின் காரணமாக இந்த தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது. வரி குறைப்பின் காரணமாக சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது போர் காரணமாக ஈரான் தனது கடல் எல்லை போக்குவரத்தை மூடி உள்ளதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தென்னை நார் பொருட்களின் ஏற்றுமதி குறைவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன.

அதன்படி ஒரு வாரத்தில் ரூ.100 கோடிக்கு தென்னை நார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. இன்னும் 2 மாதங்கள் நீடித்தால் ரூ.1,000 கோடி வரை ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு உள்நாட்டு வணிகத்தை அதிகப்படுத்தும் சாத்திய கூறுகளை கயிறு வாரியம் மூலம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கயிறு வாரியம் உற்பத்தியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, நேபாளம், பூட்டான், ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று தொழில் முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link