2 வாரங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் தவெக?

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளில் புது வரவான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிட இருக்கிறது. 234 தொகு​தி​களி​லும் தனித்​துப் போட்​டி​யிட விஜய் தயா​ராகி வரு​கிறார். தேர்​தல் ஆணை​யம் ஒதுக்​கி​யுள்ள விசில் சின்​னத்தை வலு​வான பிர​சார ஆயுத​மாக மாற்ற விஜய் திட்​ட​மிட்​டுள்​ளார். இதற்கிடையில் தவெக சார்பில் சட்டபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வாங்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை 2 வாரங்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்​பாளர் பட்​டியலை விஜய் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிடு​வார் என்று எதிர்பார்க்​கப்​படு​கிறது. அதனை தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணலை தவெக தலைவர் விஜய் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்​தப் பட்​டியலில் பெண்​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்படும் என்று கூறப்​படு​கிறது. மேலும், மாவட்​டச் செய​லாளர்கள், பிரபலங்​கள், தொழில​திபர்​களுக்கு முக்​கிய இடங்​கள் ஒதுக்கப்பட உள்​ள​தாக​வும் தவெக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது. மேலும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தவுடன், பொதுக்கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என பல்வேறு பணிகளை தவெக முழுவீச்சில் மேற்கொள்ள உள்ளது.

Source link